Tuesday, 21 August 2018

திருச்சிராப்பள்ளி

  திருச்சிராப்பள்ளி:

 
 
 

 திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம் : Tiruchirappalli), அல்லது Trichinopoly, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது ; இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்; மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.

 இதைப் பொதுவாகத் திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம்.

. பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்று.
 
 
 

பெயர்க் காரணம்:

 
திருச்சிராப்பள்ளி என்ற பெயர் திரிஷிராபுரம் (திரிஷிரா-மூன்று தலை; புரம்-ஊர்) என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது.

 இந்து சமயப் புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்தததாகக் கூறப்படுகிறது.

இதனால் இவ்வூருக்குத் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவினாலும் அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[1] சி.பி. பிரவுன் எனும் தெலுங்கு அறிஞர் சிறிய ஊர் எனப் பொருள் தரும் "சிறுத்த-பள்ளி" என்ற வார்த்தையிலிருந்து திருச்சிராப்பள்ளி என உருவாகியிருக்கும் என்ற கருத்தைத் தருகிறார்.

 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.

இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது வரலாறு: திருச்சி,1955 திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது.

 முற்கால சோழர்களின் தலைநகராகக் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர்.தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூரில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.

5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான் . பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.

சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினார். மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள்.

 இவர்கள் இரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால் அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது. முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது.
 
 
 

  மக்கள் வகைப்பாடு:

 
 
 
 
        இந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை: 8,46,915 ஆகும்.  இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.32% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.66% , பெண்களின் கல்வியறிவு 88.08% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும்.

 திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி இந்தியளவில் 47வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,46,915 ஆகவும். கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,021,717 ஆகவும் உள்ளது. 

 திருச்சிராப்பள்ளியில் 162,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும்  முசுலிம்களும் வாழ்கின்றனர்.[30] குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும் சமணர்களும் இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும் கணிசமான மக்கள் தெலுங்கு,சௌராட்டிர மொழி மற்றும் கன்னட மொழிபேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.[37] மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.


 இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர். மலைக்கோட்டையின் மேலிருந்து திருச்சி மாநகரின் வான்வழித் தோற்றம்: திருச்சிராப்பள்ளி 10.8050°N 78.6856°E என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது.

நகரத்தின் சராசரி உயரம் 88 metres (289 ft) ஆகும். இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது.

 வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட 146.7 square kilometres (56.6 சது மை) பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது.திருச்சியின் மேற்கே 16 kilometres (9.9 mi) தொலைவில் காவிரியின் கழிமுகம் துவங்குகிறது. இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது.காவேரி ஆற்றையொட்டியப் பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறும் செழிப்பான வண்டல் மண்ணை கொண்டு சேர்த்துள்ளன. தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன.[48] வண்டல் வளமிகு நன்செய் நிலங்களில் ராகியும் சோளமும் பயிரிடப்படுகின்றன.

வட-கிழக்கில் திருச்சிராப்பள்ளி வகை என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன. தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாகக் கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன. நகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன. நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன. நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன.

கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன.ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சிற்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டச் சட்டம் 1974க்கிணங்க ஏப்ரல் 5, 1974இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. நகரத்திற்கு காவேரி ஆற்றிலிருந்து 1470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது.

  ஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது. மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது. ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது. பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை.
 
 

நகர நிர்வாகம்:

 
 
 
 
 

 
 
 
 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சிராப்பள்ளி மாநகரம் 65 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

 இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது. பொருளாதாரம்[தொகு] கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம், கரூர் ரோடு, திருச்சி பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது.

உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று. திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும்  திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன.சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது.

இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகளை உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும்  நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.

1980களில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது.திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக்கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது.[68] இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.

இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது.இதனைத் தொடர்ந்து Indian Rupee symbol.svg58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன.

 இவை மூன்றும் இணைந்து 22,927.4 square metres (246,788 sq ft) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது.மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது.

 இங்கு தெளிந்த சாராவி, அசிடால்டெஹைடு,அசிட்டிக் காடி, அசிடிக் அன்ஹைடிரைடு மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது.

 திருச்சிராப்பள்ளி இந்தியாவின் "ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் Indian Rupee symbol.svg26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது.

திசம்பர் 9, 2010இல் Indian Rupee symbol.svg60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது.தமிழ்நாடு மின்னனுக்கழகம் வரையறையால் 59.74 hectares (147.6 acres) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது.

 இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி. போக்குவரத்து: நகர தொடர்பேருந்து, சத்திரம்பேருந்து நிறுத்தப்பகுதி திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 

போக்குவரத்து:




திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது

 

மத்திய பேருந்து நிலையத்தின் வரைப்படம்

 

 

 
 
 
 இங்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. 1.மத்திய பேருந்து நிலையம்:இந்த மத்திய பேருந்து நிலையமானது தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. முன்பு வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து புறப்படும் இடமாக இருந்தது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், வானூர்தி நிலையமும் ஒப்பிடும் போது, அருகாமையில் இருக்கிறது. 2.சத்திரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது.

 



படிமம்:Bus-long-townbus-Trichy-Tamil Nadu.jpg
 
 


 மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது முன்பு நகரப்பேருந்து நிலையமாக இருந்தது. பேருந்து போக்குவரத்து மாற்றம்: திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.


  அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 5கி.மி. கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது. பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது.

வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும்(lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன.

 இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன. தொடருந்துகள்: திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு. தினசரி 16 தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்கு செல்கின்றன. சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து கிளம்புகிறது, மற்றவை திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன. திருச்சி வானூர்தி நிலையம்: வானூர்தி போக்குவரத்து திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது.

 இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து மூன்றாவது பெரியதாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன.

வானூர்தி போக்குவரத்து:

 
 

 படிமம்:Trichy International Airport.JPG

 
 
 
 திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து மூன்றாவது பெரியதாகும்.

 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன.

 
 

தொடருந்துகள்:








திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு.

தினசரி 16 தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்கு செல்கின்றன. சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து கிளம்புகிறது, மற்றவை திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன.